Monday 23 April 2012

Ennavale Adi Ennavale-Kadhalan

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே)

Saturday 21 April 2012

Iyyayo Nenju alayuthadi-Aadukalam


அய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே

அய்யய்யோ ...

உன்ன தான் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
பொலம்பி தவிக்குதடி என் மனசு
ஓ..திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மேளருறேன்  ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே

அய்யய்யோ ..

மழைச் சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
ஓ.. கொடியில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரதுல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்து என்ன
ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

அய்யய்யோ...

Yaathae Yaathae-Aadukalam

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல
நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுதாங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

உள்ள தொட்ட மரமாகவே
தலை சுத்தி  போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே
ராக்கொழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னோடு செஞ்ச என்ன
நான் சருகாகி போனேனே பாத்தம் என்ன
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துரே 
நூல் ஏதும் இல்லாமலே
உசுர கோக்குறே
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நானிலும் உன்னை இணைக்கிறாய்
கண நாளிலே எனை நெய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா 
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

Munandhi charal nee- 7aam Arivu

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
ஓ அழகே ஓ இமை அழகே
ஹே கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னை தீண்டதானே
மேகம் திடம் கொண்டு
மழையைத் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஓ ஓ
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ
ஓதிகாலை ஓ அந்தி மாலை 
ஹ்ம்ம் உனைத் தேடித் பார்க்க சொல்லி போராடும் 
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும் 
பெண்ணே பம்பரத்தை போலே 
என்னைச் சுத்தற வைத்தாய் எங்கும் நில்லாமல் 
தினம் அந்தரத்தின் மேலே 
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல் 

ஹே ஹே பெண்ணே பெண்ணே ....

முன் அந்திச் சாரல் நீ 
முன் ஜென்ம தேடல் நீ 
நான் தூங்கும் நேரத்தில் 
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ 
பூ பூத்த சாலை நீ 
புலராத காலை நீ 
விடிந்தாலும் தூக்க்கத்தில் 

விழி ஓரத்தில் வரும் கனவு நீ

Sunday 15 April 2012

Thiranthean Thiranthean - Vandhan Vendran

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
தொலை தொலை என எனை நானே கேட்டு கொண்டேனே..
என் மமதையினை..
நுழை நுழை உன்னை என, நானே மாற்றிகொண்டேனே..
என் சரியதனை..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
முகத்தினை திருடினாய் திரை கதை படி
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி..
பெண்ணே உன்னை துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்..
துறவரம்.. துறக்கிறேன்..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு..
மரங்குகள் மீறியே மடை உடைதிடு..
ஓராயிரம் இரவில் சேர்த்ததை..
ஒரே நொடி இரவில் கேட்கிறாய்..
பொறுமையின்.. சிகரமே..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
சொட்டு சொட்டாக உன் பார்வை என்னுள் இறங்க..
பட்டு பட்டாக.. என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க..
திட்டு திட்டாக உன் காதல் என்மேல் படிய..
செட்டு செட்'டாக ஒரு முத்திலே முடிய..

Kanchana Mala -Vandhan Vendran

மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல..
செல்ல செல்ல செல்ல செல்ல..
காஞ்சனமாலா.. காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
மலையாள மண் மேலே, உன் தமிழ் நடக்க..
ஆறு ஏழு பந்தாக, என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா ..
பெண்ணே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..
போகும் தூரம் என்ன சொல்லு, வானம் வானம்..
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு, நீ தான் மேகம்..
நீ தேட சொல்லும் கடா நாய், தேடி பாது..
நீ தூங்க செய்யும் வீடானா..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா..
கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய், கற்று கொண்டாய்..
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ, கரை சேர்வேன்..
என் உள்ளங்கையில் வெப்பம் நீ..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொல்ளாமல் கொல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..

Anjana Anjana - Vandhan Vendran

இன்று முதல் நான் புதிதாநேன்..
உன் இனிய சிரிப்பினால் முகிலாநேன்..
கொட்டும் மழை போல் சுகமாநேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
அஹ போடு போடு, அஹ தந்தனத போடு
நீ அந்தரத்தில் ஆடு, அஹ துள்ளி விளையாடு,
அஹ தொட்டு தொட்டு பாடு, எதுக்கு கட்டுப்பாடு,
நீ வந்து வந்து தேடு, அஹ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு, மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுல்ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..
ஒரு சின்ன பார்வையில்,
நான் விடுதலை விடுதலை அறிந்தேனே..
உனது அன்பு வார்த்தையில்,
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே..
ஹே கேளு கேளு, நீ என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு, நா சொல்லுவதை கேளு,
சொல்லாதையும் கேளு, நெருங்கி வந்து கேளு,
உனதருகில் மொழியாய் வருவேனே..
உண்மையாலே உண்மையாலே..
சிறகில்லை ஆயினும், நான் இறகென இறகென பறந்தேனே..
காணவில்லை ஆயினும், நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே..
ஹே பாரு பாரு, நீ பக்கம் வந்து பாரு,
நீ பாடி பாடி பாரு, அஹ பத்திரமா பாரு,
ஆனதேச பாரு, பதுக வில்லை பாரு
சில நொடியில் அதை நான் தருவேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுள்
ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..