Saturday 21 April 2012

Iyyayo Nenju alayuthadi-Aadukalam


அய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே

அய்யய்யோ ...

உன்ன தான் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
பொலம்பி தவிக்குதடி என் மனசு
ஓ..திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மேளருறேன்  ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே

அய்யய்யோ ..

மழைச் சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
ஓ.. கொடியில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரதுல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்து என்ன
ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

அய்யய்யோ...

Yaathae Yaathae-Aadukalam

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல
நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுதாங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

உள்ள தொட்ட மரமாகவே
தலை சுத்தி  போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே
ராக்கொழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னோடு செஞ்ச என்ன
நான் சருகாகி போனேனே பாத்தம் என்ன
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துரே 
நூல் ஏதும் இல்லாமலே
உசுர கோக்குறே
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நானிலும் உன்னை இணைக்கிறாய்
கண நாளிலே எனை நெய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா 
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

Munandhi charal nee- 7aam Arivu

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
ஓ அழகே ஓ இமை அழகே
ஹே கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னை தீண்டதானே
மேகம் திடம் கொண்டு
மழையைத் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஓ ஓ
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ
ஓதிகாலை ஓ அந்தி மாலை 
ஹ்ம்ம் உனைத் தேடித் பார்க்க சொல்லி போராடும் 
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும் 
பெண்ணே பம்பரத்தை போலே 
என்னைச் சுத்தற வைத்தாய் எங்கும் நில்லாமல் 
தினம் அந்தரத்தின் மேலே 
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல் 

ஹே ஹே பெண்ணே பெண்ணே ....

முன் அந்திச் சாரல் நீ 
முன் ஜென்ம தேடல் நீ 
நான் தூங்கும் நேரத்தில் 
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ 
பூ பூத்த சாலை நீ 
புலராத காலை நீ 
விடிந்தாலும் தூக்க்கத்தில் 

விழி ஓரத்தில் வரும் கனவு நீ